ரிபப்ளிக் டிவிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: பிரிட்டன் அரசு உத்தரவு!

கடந்த சில நாட்களாக ரிபப்ளிக் டிவி மற்றும் அந்த டிவியின் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் அவர்கள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே ஒரு தற்கொலை வழக்கில் சிக்கிய அர்னாப் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரிட்டன் அரசு ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்திய அர்னாப் கோஸ்வாமி இந்தியா விஞ்ஞானிகளை உருவாக்குகிறது என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்றும் பேசியுள்ளார்
இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் அரசு, பாகிஸ்தான் நாட்டை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவிக்கு ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது