அசம்பவித்தை தொடர்ந்து ஏப்ரல் 17 இல் வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

தேர்தலில் நடைபெற்ற அசம்பவித்தை தொடர்ந்து வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தகவல்!
 
அசம்பவித்தை தொடர்ந்து ஏப்ரல் 17 இல் வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி அறிவித்து இருந்தபடி நடைபெற்று முடிந்தது. மேலும் வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார். அவர்களுக்கு பாதுகாக்கும் வண்ணம் சனிடைசர் போன்றவைகள் கொடுக்கப்பட்டன. இன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது.

vote

தேர்தலன்று அசம்பவித்தம் நடைபெற்றது சோகத்தை அளிக்கிறது. அதன்படி கோவில்பட்டி தொகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது நடைபெற்றது. மேலும் அரக்கோணம் பகுதியில் இளைஞர்கள் இருவர் இரட்டைக்கொலை பட்டதும் நடைபெற்றது. மேலும் ஒரு சில பகுதிகளில் பணப்பட்டுவாடா  நடைபெற்றன. அதன் வரிசையாக சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் அசம்பாவிதம் நடந்தால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

 தற்போது வேளச்சேரியில் உள்ள அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு ஏப்ரல் 17ம் தேதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக வேட்பாளர் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு இன்று ஒருநாள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரம் பண்ணுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் , அதிமுக, மநீம வேட்பாளர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களும் தங்களது பரப்புரையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் முக கவசம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web