நிவாரண பொருட்கள் வேண்டாம் நிவாரண நிதி வேண்டும் கோரிக்கை!

ஊட்டியில் நிவாரண பொருட்கள் பதிலாக நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் சுற்றுலா வழிகாட்டிகள்!
 
நிவாரண பொருட்கள் வேண்டாம் நிவாரண நிதி வேண்டும் கோரிக்கை!

தற்போது தமிழகத்தில் பல சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் அனைவராலும் மிகவும் சுற்றுலாத்தளம் என்று கூறப்படும் ஊட்டியிலும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதாக குறிப்பிடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் சுற்றுலா வழிகாட்டிகள் சாலையோர கடைகள் போன்றோர் வருமானம் என்றும் தொழில் என்றும் காணப்படுகின்றனர். இதனால் பலரும் சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் பேசிய பின்னர் உதவ படும் என்றும் அதிகாரிகள் அவர்கள் கூறினர். இந்நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.innocent divya

ஆனால் சுற்றுலா வழிகாட்டிகள் தங்களுக்கு நிவாரண பொருட்கள் பதிலாக நிவாரண நிதி தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர் மேலும் உதகையில் வாழ்வாதாரம் முடக்கி பல சுற்றுலா வழிகாட்டிகள் தவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுலா தளத்தை வாழ்வாதாரமாக கொண்டு அங்கு லட்சக்கணக்கில் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு 9 மாதங்கள் அவர்கள் வருவாய் இழந்து தவித்து தாக்கப்படுகிறது கூறப்படுகிறது.

இந்த ஆண்டும் கொரோனா  இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் கடந்த 20ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாத்தலங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன இதனால் இவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். வருவாய் இழந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பொழுதுதான் அவர்கள் நிவாரண பொருட்கள் பதிலாக நிதி வழங்கினால் நலமாயிருக்கும் என்று உதவி கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்தாண்டு நிவாரண பொருட்கள் வழங்கி தங்கள் வாழ்வாதாரம் ஓரளவு மேம்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த ஊரடங்கு மீண்டும் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்ததாக அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

From around the web