நிவாரண நிதி: "ஆயிரம் கோடி" அப்பு குஜராத்துக்கு! அதுவும் உடனடியா!

டவ் தே புயல் நிவாரண பணிக்காக உடனடியாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!
 
strom

தற்போது நம் நாட்டில் காலநிலையானது மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது. நம்நாட்டு மட்டுமே அல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் தற்போது காலநிலையானது மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது. ஏனென்றால் தற்போது இந்தியாவில் வெயில் காலம் நிலவும், ஆனால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மத்திய அரபிக்கடலில் சில தினங்களுக்கு முன்பாக புயல் ஒன்று உருவானது. மேலும் அதற்கு டவ் தே புயல் என்றும் பெயர் வைத்தனர். மேலும் இதன் காரணமாக மும்பை பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.helicopter

மேலும் நம் தமிழகத்திலும் நீலகிரி மாவட்டத்தில் மழை நீர் அதிகமாக சாலைகளில் ஓடியது. மேலும் கேரளா கர்நாடகா மாநிலத்தில் இந்த புயலின் பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் குஜராத் மாநிலத்தில்  சொல்ல முடியாத அளவிற்கு இந்த டவ் தே புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் இதனால் பாதிப்புகள் மிகவும் கொடுமையாக காணப்பட்டது.. இந்த பாதிப்புகளை அறிவதற்காக இன்று காலை பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில முதல்வரும் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் புயல் பாதித்த பகுதிகளை பார்வை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு நிவாரண நிதியை ஒதுக்கிய தாக கூறப்படுகிறது. மேலும் இந்த புயல் நிவாரண பணிகளை உடனடியாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதன் மதிப்பு என்னவென்றால் ஆயிரம் கோடி ஆக உள்ளது.மேலும் இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக உதவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் டவ் தே பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய மத்திய அமைச்சர்கள் குழுவை நியமிக்க உள்ளதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.

From around the web