அரை நிர்வாண உடலில் குழந்தைகள் படம் வரைந்த வழக்கு: ரெஹானாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளாவைச் சேர்ந்த சமூக சேவகி என்று கூறப்படும் ரெஹானா என்பவர் சமீபத்தில் தனது அரை நிர்வாணமான உடலில் தனது குழந்தைகளை வைத்து பெயிண்டிங் வரைய செய்த வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இதுகுறித்து கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிர முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் ரெஹானா கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது ரெஹானா அவர்கள் தனது
 

அரை நிர்வாண உடலில் குழந்தைகள் படம் வரைந்த வழக்கு: ரெஹானாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளாவைச் சேர்ந்த சமூக சேவகி என்று கூறப்படும் ரெஹானா என்பவர் சமீபத்தில் தனது அரை நிர்வாணமான உடலில் தனது குழந்தைகளை வைத்து பெயிண்டிங் வரைய செய்த வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

இதுகுறித்து கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிர முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் ரெஹானா கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது ரெஹானா அவர்கள் தனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க வீடியோவை எடுத்துள்ளதாகவும் அது தவறு இல்லை என்றும் வழக்கறிஞர் வாதாடினார்

ஆனால் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஆவேசம் அடைந்தார். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கும் ரெஹானா அதனை வீட்டில் தனியாக கற்றுக் கொடுக்கலாம் என்றும் அதை யூடியூபில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு தாய் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து குரானில் விரிவாக விளக்கப்பட்டு இருப்பதாகவும் அதை ரெஹானாவை படிக்கச் சொல்லுங்கள் நீதிபதி ஆவேசத்துடன் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்

மேலும் ரெஹானாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மிக விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web