13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் குறைப்பு! திமுக எதிர்ப்பு!

சென்னையில் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்றை குறைக்க திமுக தரப்பில் எதிர்ப்பு!
 
13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் குறைப்பு! திமுக எதிர்ப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னர் அறிவித்திருந்தது தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இந்த தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு  பதிவானது நடைபெற்றது. மேலும் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்  பாதுகாப்பான சூழலில் கண்காணிப்பு மத்தியில் உள்ளது. மேலும் தேர்தலின்போது தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

dmk

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. மேலும் தமிழகத்தில் மே 2ஆம் தேதி எண்ணப்படும் என்று முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் நிலை தலைகீழாக உள்ளது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழக அரசின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. எனினும் நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. அதற்காக தமிழகத்தில் வாக்கு எண்ணப்படும் தேதி குறித்த சர்ச்சைகள் சில நாட்களாக இருந்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், கொரோனா விதிகளுக்கு கட்டுப்பட்டு வாக்கு எண்ணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்நிலையில் தற்போது சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை வைத்திருந்தார். மேலும் அதில் வாக்கு எண்ணிக்கை காண சுற்றுகள் பற்றியும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். சென்னையில் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் குறைப்பதாக கூறி இருந்தன. அதற்கு திமுகவினர் வாக்கு எண்ணிக்கை சுற்றை குறைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று ஏற்பாடாக கூடுதல் அறைகளில் 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கையை நடத்த திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

From around the web