மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று:  3வது அலை ஆரம்பமா?

 
third wave

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக தமிழக அளவிலும் இந்திய அளவிலும் சரி கொரோனா தொற்று அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் நேற்று தமிழகத்தில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் மூன்றாவது அலை வந்துவிட்டதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பதற்காக அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

From around the web