ஜார்ஜியாவில் மட்டும் மறு எண்ணிக்கை: ஜோபைடன் வெற்றி பாதிக்குமா?

 

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் அபாரமாக வெற்றி பெற்றார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் அவருடைய வெற்றி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திடீரென ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் வாக்குகளை மீண்டும் எண்ண அம்மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மட்டும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாக்குகளையும் கைகளால் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாநில செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் 

joe biden

இருப்பினும் அதிபர் ஆவதற்கு ஏற்கனவே 270 வாக்குகளுக்கு மேல் ஜோபைடன் பெற்று விட்ட நிலையில் ஜார்ஜியாவின் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதால் அதன் முடிவு ஜோபைடனுக்கு பாதகமாக இருந்தாலும் அவர் அமெரிக்க அதிபர் ஆவதற்கு எந்தவித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web