திமுகவிடம் மனு கொடுத்தால் ரசீதுதான் தரும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

 

கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு சொற்போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிக விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் வெளிப்படும் என்றும் முக ஸ்டாலின் ஆவேசமாக சமீபத்தில் கூறியிருந்தார்

mk stalin

இதற்கு அதிரடியாக பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, முக ஸ்டாலின் குறித்து ஒரு சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் அவை சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. தற்போது மீண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் ’ஆன்லைனில் மட்டுமே அரசியல் நடத்தும் திமுகவினால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் கணினி போல் செயல்படும் திமுகவிடம் மனு கொடுத்தால் மக்களுக்கு வெறும் ரசீது மட்டுமே கிடைக்கும் என்றும் கூறினார் 

மேலும் அதிமுக நேரடியாக களப்பணி ஆற்றி வருகிறது என்றும் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த அதிரடி கருத்துக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web