ரத்தன் டாடாவின் கல்லூரி கால புகைப்படம்: 3 மணி நேரத்தில் 4 லட்சம் லைக்ஸ் 
 

 

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மூன்றே மணி நேரத்தில் நான்கு லட்சம் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளது. ரத்தன் டாடா கடந்த 1955 ஆம் ஆண்டு படிக்கும் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

மேலும் அந்த புகைப்படத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் தனது நண்பர் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் அவர் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி மூன்றரை மணி நேரத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் தான் இந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் வைரலாகும் என்ற நிலையில் தற்போது தொழிலதிபரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web