புதுச்சேரியில் கால்பதிக்க உள்ளார் ரங்கசாமி!அவருக்கு 20 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது!

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 16 முதல் 20 தொகுதிகளை என்ஆர் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது!
 
புதுச்சேரியில் கால்பதிக்க உள்ளார் ரங்கசாமி!அவருக்கு 20 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது!

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மேலும் புதுச்சேரியில் பலவிதமான கூட்டங்கள் களமிறங்கி இருந்தன. குறிப்பாக பாஜக- என்ஆர் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி களம் இறங்கின. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் புதுச்சேரியில் தேர்தலை சந்தித்துள்ளன.pudhucherry

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு வெளிச்சமாக உள்ளதாக கூறுகிறது. அதன்படி என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அவனது 16 முதல் 20 பகுதிகளை கைப்பற்றும் என்று கூறுகிறது மேலும் புதுச்சேரியில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி யானது 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. அதனால் புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க உள்ளது என்ஆர் காங்கிரஸ்.

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி. மேலும் தமிழ்நாடு மேற்கு வங்கம் அசாம் போன்ற மாநிலங்களிலும் கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி பாஜகவுடன் இருக்குமா? என்று இழுபறி நிலவி நிலையில் என் ஆர் காங்கிரஸ் பாஜக அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

From around the web