இரவு முழுவதும் அலர்ட் பரபரப்பான இராமநாதபுரம் போலீசார்

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இக்குண்டு வெடிப்பால் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட கடல்பரப்பு இலங்கைக்கு மிக அருகில் உள்ளதாலும் கடல் வழி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று மாலை கர்நாடக காவல்துறைக்கு வந்த தகவல் ஒன்று தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்க இருப்பதாகவும் இதற்கு தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் தகவல் வெளியானது.
 

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இக்குண்டு வெடிப்பால் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட கடல்பரப்பு இலங்கைக்கு மிக அருகில் உள்ளதாலும் கடல் வழி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இரவு முழுவதும் அலர்ட் பரபரப்பான இராமநாதபுரம் போலீசார்

இருப்பினும் நேற்று மாலை கர்நாடக காவல்துறைக்கு வந்த தகவல் ஒன்று தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்க இருப்பதாகவும் இதற்கு தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டத்தையும் அலர்ட் செய்தது தமிழக காவல் துறை.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலத்தில் கடுமையான சோதனை நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக போலிசுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் சொன்னதாக சுந்தரமூர்த்தி என்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web