ரமேஷ் கார்ல அமைச்சர் டைரி! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனை!
 

சட்டமன்ற தேர்தல் யில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளன. இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக  தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சியை வைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக  காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

admk
Caption

மேலும் அந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். தேர்தல் பறக்கும் படையினர் விராலிமலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரமேஷ் என்பவரின் காரில் அமைச்சர் விஜயபாஸ்கர்  டைரி ஒன்று பிடிபட்டது. மேலும் அந்த காரில் இனிப்புகளும், அதிமுக துணிகளும், மளிகைப் பொருட்களும் இருந்தன. மேலும் அந்த டைரியில் விராலிமலை பகுதியில் உள்ளவர்கள் பெயர் பட்டியல்  உள்ளது. ஒரு ரகசிய வரைபடமும் உள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web