வீடு திரும்பினார் ராமராஜன்: முதலமைச்சருக்கு நன்றி!

 

கடந்த 80,90ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வெற்றி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ராமராஜன் என்பதும், அவர் நடித்த ’கரகாட்டகாரன்’ உள்பட பல திரைப்படங்கள் வசூலை வாரிக்குவித்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு நடிகர் ராமராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், தனது நலம் குறித்து விசாரித்ததோடு உதவியும் செய்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர், இயக்குனர், அரசியல்வாதியாக இருந்த ராமராஜன் கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web