ரஜினி சொல்லிக்கொடுத்த யோகா: மாளவிகா மோகனன் பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியுடன் தான் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது அவர் கூறிய ஆன்மீக அறிவுரைகள் அதிகமானவற்றை தான் கேட்டுக் கொண்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார் மேலும் உடலுக்கும் மனதுக்கும் திடத்தை கொடுக்கும் யோகா குறித்து அவரிடம் இருந்து பல முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக கிரியா யோகாவால் ஏற்படும் பலன்கள் குறித்து அவரிடம்
 

ரஜினி சொல்லிக்கொடுத்த யோகா: மாளவிகா மோகனன் பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியுடன் தான் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது அவர் கூறிய ஆன்மீக அறிவுரைகள் அதிகமானவற்றை தான் கேட்டுக் கொண்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்

மேலும் உடலுக்கும் மனதுக்கும் திடத்தை கொடுக்கும் யோகா குறித்து அவரிடம் இருந்து பல முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக கிரியா யோகாவால் ஏற்படும் பலன்கள் குறித்து அவரிடம் தெரிந்து கொண்டதாகவும் அதனை தான் இப்போதும் பின்பற்றி வருவதாகவும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

’பேட்ட’ படத்தில் ஒரு சிறிய கேரக்டர் என்றாலும் தான் ஒப்புக் கொண்டதற்கு கிடைத்த பரிசுதான் ’மாஸ்டர்’ பட வாய்ப்பு என்றும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மாளவிகாவின் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் தற்போது மாளவிகா மோகனன் ஒரு இந்தி ஆக்சன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web