அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக அரசியல் களத்தில் கூடுதல் வீரராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரவேண்டும் என பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

 

தமிழக அரசியல் களத்தில் கூடுதல் வீரராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரவேண்டும் என பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியவுடன் ரஜினி விருப்பப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பாஜகவின் இன்னொரு பிரமுகர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்

இவ்வாறு பாஜக பிரமுகர்கள் ரஜினியின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வானதி சீனிவாசன் அவர்கள் கூறியபோது ’அரசியல் களத்தில் கூடுதலாக ஒரு வீரராக ரஜினிகாந்த் வரவேண்டும். அதன் பின் தான் கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசனின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அவருடைய அரசியல் கட்சியின் முதல் கூட்டம் மதுரையில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த கூட்டத்தின் போது ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர் கொடி மற்றும் கொள்கைகளை முறைப்படி அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web