அதிமுகவுடன் ரஜினி கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுகவுடன் அவர் கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தனது கருத்தை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் “கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் தமிழக அரசை, ரஜினிகாந்த் பாராட்டி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரஜினிகாந்த் தமிழக அரசை பாராட்டுவது நல்ல விஷயம்தான். அதனால் ரஜினி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதம், சாதி, மொழியால் மக்களை பிரித்து அரசியல் செய்யும்
 
அதிமுகவுடன் ரஜினி கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுகவுடன் அவர் கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தனது கருத்தை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

“கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் தமிழக அரசை, ரஜினிகாந்த் பாராட்டி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரஜினிகாந்த் தமிழக அரசை பாராட்டுவது நல்ல விஷயம்தான். அதனால் ரஜினி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதம், சாதி, மொழியால் மக்களை பிரித்து அரசியல் செய்யும் முயற்சியை மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டார்கள்.

மேலும் அதிமுக-ரஜினி இடையே சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்க எனது வாழ்த்துகள். ரஜினி உடனான அதிமுக கூட்டணி குறித்து நான் முடிவு செய்ய முடியாது. அதனை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும்’ என்றார்.

ஏற்கனவே வரும் நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் கூறியிருந்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பாரா? அதிமுகவுடன் கூட்டணி அமைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web