அண்ணா அறிவாலயம் சுவரில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு!

 
அண்ணா அறிவாலயம் சுவரில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு!

ரஜினிக்கு ஆதரவான போஸ்டர் சென்னை அண்ணா அறிவாலயத்தின் சுற்றுச்சுவரிலேயே ஒட்டப்பட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது பெயரில் பரவி வரும் கடிதமும் நேற்றைய ரஜினியின் டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்று ரஜினியின் டுவிட் வெளிவந்த பின்னர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றே பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ரஜினியின் ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, எதிரிகளை ஏமாற்றம் வகையில் திடீரென பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஆதரவாக போஸ்டர்கள் சென்னையின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தின் சுற்றுச் சுவரிலேயே ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீங்க வாங்க ரஜினி. எங்கள் ஆதரவு உங்களுக்கு. ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு போன்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் திமுகவுக்கு தான் சிம்மசொப்பனமாக இருப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திமுகவின் தலைமை அலுவலகத்தின் சுற்றுச்சுவரிலேயே ரஜினியின் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web