சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாமரர் முதல் பணக்காரர் வரை திரையுலகினர் முதல் அரசியல்வாதி வரை பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருவது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் குறிப்பாக அமிதாப்பச்சன் குடும்பத்தினர், அனுபம்கெர் குடும்பத்தினர் உட்பட பல திரை உலகினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூகவலைதளங்களில் திடீர் என ஒரு வதந்தி கிளம்பியது. ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு
 
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாமரர் முதல் பணக்காரர் வரை திரையுலகினர் முதல் அரசியல்வாதி வரை பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருவது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

குறிப்பாக அமிதாப்பச்சன் குடும்பத்தினர், அனுபம்கெர் குடும்பத்தினர் உட்பட பல திரை உலகினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூகவலைதளங்களில் திடீர் என ஒரு வதந்தி கிளம்பியது. ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தன்னைதானே வீட்டில் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அந்த வதந்திகள் பரவியது

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது தனது டுவிட்டரில் ரஜினி அவர்களுக்கு கொரோனா வைரஸ் என்பது பொய் செய்தி என்றும் இக்கட்டான தருணத்தில் இது போன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொண்டால் நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரஜினிக்கு கொரனோ வைரஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது

From around the web