கொரோனா எதிரொலி: யாரையும் வீட்டுக்குள் விடாத ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது அரசியல் மற்றும் திரையுலக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை செய்வார். மேலும் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அந்த திரைப்படக் குழுவினர்கலை அவர் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்து சொல்வார் என்பது தெரிந்ததே ரஜினிகாந்த் படப்பிடிப்பு இல்லாமல் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தால் தினந்தோறும் அவரை விஐபிகள் சந்தித்து வருவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பாதிக்கத் தொடங்கியபோது, ஆரம்ப கட்டத்தில் ஒரு சிலரை மட்டும் சந்தித்து
 

கொரோனா எதிரொலி: யாரையும் வீட்டுக்குள் விடாத ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது அரசியல் மற்றும் திரையுலக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை செய்வார். மேலும் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அந்த திரைப்படக் குழுவினர்கலை அவர் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்து சொல்வார் என்பது தெரிந்ததே

ரஜினிகாந்த் படப்பிடிப்பு இல்லாமல் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தால் தினந்தோறும் அவரை விஐபிகள் சந்தித்து வருவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பாதிக்கத் தொடங்கியபோது, ஆரம்ப கட்டத்தில் ஒரு சிலரை மட்டும் சந்தித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முழுவதுமாக யாரையும் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது

மேலும் வீட்டை விட்டு அவர் வெளியே செல்வதும் இல்லை என்றும் வீட்டுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதிலும் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்காது என்றும் தமிழகத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்தால் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேனே என ரஜினிகாந்த் உறுதியாக சொல்லி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web