பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராஜஸ்தான் முதல்வர்!

30 லட்சம் கொரோனா தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம்!
 
பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராஜஸ்தான் முதல்வர்!

மக்கள் மத்தியில் கண்ணுக்குத் தெரியாத உயிரைக் கொல்லும் ஆட்கொல்லி நோயாக இப்படி பல பெயர்களால் அழைக்கப்படும் வைரஸ் கொரோனா.  முதன்முதலாக சீன நாட்டில் கொரோனா  கண்டறியப்பட்டது. தற்போது உலகில் அனைத்து நாடுகள் இதன் தாக்கம் உள்ளது.  இந்தியாவிலும் கொரோனா  நோயின் தாக்கம் அது கடந்த ஆண்டின் தொடக்க முதலே வேகமாக பரவியது. இதனால் இந்தியா  எந்த ஒரு நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தை நாடெங்கும் அமல்படுத்தியது.

modi

 கண்ட இதர நாடுகளும் தங்கள் நாடுகளிலும் முழு ஊரடங்கு சட்டத்தினை அமல்படுத்தினார். இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா  நோயின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது சில வாரங்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் கொரோனா  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக பரவுகிறது.

மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் தடைகள் தளர்வுகள் போன்றவற்றை விதித்தன. அதன்படி தமிழகத்தில் நாளை தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை அந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் அந்த கட்டுப்பாடுகளால் பயன் இல்லை என்றால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

 தற்போது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் .அதன்படி தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் 30 லட்சம் கொரோனா  தடுப்பூசிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார் தங்களிடம் இருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்னும் இரண்டு நாளில் தீர்ந்துவிடும் என்பதால் 30 லட்சம் கொரோனா  தடுப்பூசிகள் கேட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

From around the web