வாட்ஸனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்: பரபரப்பு தகவல்

 

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து 177 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் கேப்டன் ஸ்மித் அபார அரைசதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இன்று கேப்டனாக தலைமை ராஜஸ்தான் கேப்டனாக அந்த அணியை வழி நடித்துக்கொண்டிருக்கும் ஸ்டீவ் சுமித் கடைசி இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி உள்ளார் 

இதுவரை ராஜஸ்தான் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவரக்ள் வரிசையில் கடைசி இடத்தில் இருந்த ஸ்மித் இன்று ஒருபடி முன்னேறியுள்ளார். இதுவரை ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே 56 போட்டிகளிலும், ராகுல் டிராவிடின் 40 போட்டிகளிலும், ரஹானே 24 போட்டிகளிலும் தலைமையேற்று உள்ளனர்

அந்த வகையில் ஷேன் வாட்சன் 21 போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் 21 போட்டிகளிலும் தலைமை ஏற்று இருந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அணிக்கு தலைமை ஏற்றதன் மூலம் 22ஆவது போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை ஏற்று கடைசி இடத்தில் முன்னேறி நான்காவது இடத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web