நாளை முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்!!- வானிலை ஆய்வு மையம்;

தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
rain

ஆனால் தற்போது கோடை காலம் நிலவுகிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மழை பெய்தும் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் அடை மழையும் கனமழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் மழை நீரானது ஆறு போல சாலையோரங்களில் ஓடி கடைகளும் வீடுகளும் உள்ளது. ஆனால் பல வீடுகளில் மழை நீர் உட்புகுந்து பெரும் இன்னல்களை கொடுத்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்தது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சாலைகளில் மழை வேகமாக ஓடியது.rain

அதை அடுத்து கன்னியாகுமரி திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை நீரானது மிகவும் அதிகமாக சாலைகளில் ஓடியது. கன்னியாகுமரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய மழையானது தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதனை தொடர்ந்து குழித்துறை பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மயிலாடி பகுதியில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மழையானது இன்னும் சில நாட்களில் படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால் நாளைய தினம் மத்திய வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது அனைவரையும் குழப்புகிறது.

From around the web