கொரோனா வார்டில் அருவிபோல் விழும் தண்ணீர்: கனமழையால் நோயாளிகள் அதிர்ச்சி

கொரோனா வார்டில் உள்ள பெரிய ஓட்டை வழியாக கனமழையால் பெய்த மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பெய்ரெல்லி என்ற பகுதியில் உள்ள ஒரு கொரனோ வார்டில் நோயாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த
 

கொரோனா வார்டில் அருவிபோல் விழும் தண்ணீர்: கனமழையால் நோயாளிகள் அதிர்ச்சி

கொரோனா வார்டில் உள்ள பெரிய ஓட்டை வழியாக கனமழையால் பெய்த மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பெய்ரெல்லி என்ற பகுதியில் உள்ள ஒரு கொரனோ வார்டில் நோயாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த வார்டில் உள்ள மேல் தளத்தில் திடீரென ஓட்டை விழுந்தது இந்த ஓட்டை வழியாக மழை நீர் அருவியாக கொட்டியதை பார்த்து அங்கு சிகிச்சை பெற்று நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த வார்டில் சிகிச்சை பெறுவதற்கு அந்த நோயாளிகள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு உள்ள நோயாளிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

From around the web