மழைனா மழை அப்படி ஒரு மழை! வெள்ளத்தில் மூழ்கிய நீலகிரி!அதுவும் ஒரே நாளில்  "18 சென்டிமீட்டர்"

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தகவல்!
 
மழைனா மழை அப்படி ஒரு மழை! வெள்ளத்தில் மூழ்கிய நீலகிரி!அதுவும் ஒரே நாளில் "18 சென்டிமீட்டர்"

தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காரணம் என்னவெனில் அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுவும் குறிப்பாக நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.rain

அதனை தொடர்ந்து சோலையாறு பகுதியில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தேவாலா பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வால்பாறை, மேல் பவானி ஆகிய பகுதிகளில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், சின்கோனா பகுதியில் 9 சென்டி மீட்டரும், சிவலோகம் பகுதியில் 8 சென்டி மீட்டரும், கூடலூர் பஜார், பெருஞ்சாணி, புத்தர் அணைப்பகுதியில் தலா ஏழு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

குளித்துறை தக்கலை பகுதியில் ஆறு  சென்டி மீட்டர் மழையும், குளச்சல் ,தேக்கடி, பெரியார் அவலாஞ்சி, கன்னியாகுமரி பகுதியில் தலா 5  செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தென்காசி, பாபநாசம் பகுதியில் 4 செண்டி  மீட்டர் மழையும், மயிலாடி, நாகர்கோயில், கொட்டாரம் பொள்ளாச்சி பகுதியில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

From around the web