தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகிறது மழை!"மேல் அடுக்கு சுழற்சி"

மராட்டிய முதல் தென்தமிழக கடற்கரைப் பகுதி வரை வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது!
 
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகிறது மழை!"மேல் அடுக்கு சுழற்சி"

கோடைக்காலம் தொடங்கினாலே மக்கள் மத்தியில் மிகுந்த பீதி நிலவும். காரணம் என்னவெனில் கோடைக்காலம் தொடங்கினால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம்  இயல்பு நிலையை விட வெயில் தாக்கம் மிகவும் சுட்டெரிக்கும். இதனால் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கம் இருக்கும். மேலும் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஆனதே  அதிகமாக காணப்படும். மேலும் தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் வெயில் தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது.weather

வெயிலின் தாக்கத்தில் மத்தியிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழையானது கொட்டித் தீர்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து அப்பகுதியில் வெப்பநிலையும் கோடை காலத்தில்  உஷ்ணமும் குறைந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு இன்பமான தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மராட்டிய முதல் தென் தமிழக  கடலோரப் பகுதி வரை வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் சேலம் ஈரோடு தர்மபுரியில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி திருப்பூர் திருப்பத்தூர் மதுரை கரூர் நாமக்கல் நெல்லை கள்ளக்குறிச்சி விழுப்புரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதை தொடர்ந்து திருச்சி வேலூர் விருதுநகர் தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த மழையானது ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள். உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

From around the web