தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை; அதுவும் குறிப்பாக "குமரியில் மழை"!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது நம் தமிழகத்தில் நிலவி வருகிறது.. மக்கள் அனைவரும் மிகுந்த வெயிலின் தாக்கத்தையும் வெப்பத்தையும் உஷ்ணத்தையும் உணருகின்றனர். இதனால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஆனதுஅதிகமாக காணப்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் கன மழையும், மிதமான மழையும் பெய்து வருகின்ற நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையமானது சில இன்பமான தகவல்களை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. காரணம் தமிழகத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.kaniyakumari

அதுவும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து மே 30ம் தேதியில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்கள். புதுச்சேரி காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளது.

மே 31 ஜூன் 1ஆம் தேதியில் நீலகிரி கோவை தேனி கன்னியாகுமரி சேலம் தர்மபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web