அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி, விழுப்புரம், நீலகிரி, வேலூர், நெல்லை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை
 

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி, விழுப்புரம், நீலகிரி, வேலூர், நெல்லை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 

மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 45 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், அந்த பகுதிக்கு அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறினார். 

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிச்சயம் மழை பெய்யும். மேலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

From around the web