ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீஸ்!

 

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுத்து உள்ளன என்பதும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சிகள் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் விவசாய மசோதாவுக்கு எதிராக சுமார் 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதனை அடுத்து இந்த கையெழுத்துகளுடன் சற்று முன்னர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸ் பேரணி சென்றது 

rahul and priyanka

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட நூற்றுக்கணக்கானோர் இந்த பேரணியில் சென்றபோது ஜனாதிபதி மாளிகை அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜனாதிபதியை சந்திக்க ராகுல் காந்தி உள்பட 3 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றவர்கள் பேரணிவிலிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட மூவர் ஜனாதிபதியை இன்று சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக வாங்கப்பட்ட இரண்டு கோடி பேர் கையெழுத்து அளித்து, இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web