’எஸ் பேங்க் இனி நோ பேங்க்’ ராகுல் காந்தி கிண்டல்

தனியார் வங்கிகளில் பிரபல வங்கியாக இருந்து வந்த எஸ் பேங்க், திடீரென வாரக்கடன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது இதையடுத்து அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் யாரும் கவலையடைய தேவையில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் இந்த நிலையில் இது
 
’எஸ் பேங்க் இனி நோ பேங்க்’ ராகுல் காந்தி கிண்டல்

தனியார் வங்கிகளில் பிரபல வங்கியாக இருந்து வந்த எஸ் பேங்க், திடீரென வாரக்கடன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது

இதையடுத்து அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் யாரும் கவலையடைய தேவையில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

இந்த நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ’எஸ் பேங்க் இனி நோ பேங்க்’என்றும் மோடியின் ஆட்சியில் வங்கிகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

From around the web