தூத்துக்குடி மக்களுக்கு ராகுல் காந்தி விடுத்த திடீர் வேண்டுகோள்: சாத்தான்குளம் விவகாரத்தால் பரபரப்பு

சாத்தான்குளம் விவகாரம், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே உள்ளூர் அரசியல்வாதி மட்டுமன்றி தேசிய தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து தவறு செய்த காவல்துறையினர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர் அந்த வகையில் ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தற்போது தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அந்த வேண்டுகோளில்
 

தூத்துக்குடி மக்களுக்கு ராகுல் காந்தி விடுத்த திடீர் வேண்டுகோள்: சாத்தான்குளம் விவகாரத்தால் பரபரப்பு

சாத்தான்குளம் விவகாரம், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே உள்ளூர் அரசியல்வாதி மட்டுமன்றி தேசிய தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து தவறு செய்த காவல்துறையினர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர்

அந்த வகையில் ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தற்போது தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்

அந்த வேண்டுகோளில் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களும் மெழுகுவத்தி ஏந்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இன்று மாலை 7 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மரணம் அடைந்த இருவரும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து தூத்துக்குடி காங்கிரஸ்காரர்கள் மெழுகுவத்தி ஏந்த தயாராகி வருகின்றனர்

மேலும் கொரோனா சூழல் காரணமாக தன்னால் சாத்தான்குளத்திற்கு நேரில் வர முடியவில்லை என்றும் இந்த பிரச்சினை முடிந்த பிறகு கண்டிப்பாக நேரில் வந்து ஜெயராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web