மீண்டும் ஹத்ராஸ் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி: உபியில் பரபரப்ப்பு

 

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் எதிர்க்கட்சிகள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நம்பத் தயாராக இல்லை என்று கூறி வருகின்றனர் 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதிக்குச் சென்றனர். ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த மறைந்த இளம்பெண்ணின் பெற்றோர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் போலீசாரால் தடுக்கப்பட்டனர் என்பதும் இந்த தள்ளுமுள்ளுவில் ராகுல்காந்தி கீழே விழுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்கள் 

ஹத்ராஸ் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவின் தினமும் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் ஹத்ராஸ் இளம்பெண் கொலை செய்யப்பட்டதை மட்டும் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது

From around the web