ராகுல்காந்தி தேர்ச்சி பெற ஆர்வம் இல்லாதவர்: ஒபாமா விமர்சனம்

 

ராகுல் காந்தி எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் இல்லாதவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் தனது நூலில் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசியல் கால நினைவுகள் குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் ஒரு சில இந்திய தலைவர்களையும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது தான் ஒபாமாவும் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

obama rahul

இந்த நூலில் ராகுல் காந்தி குறித்து கூறியபோது, பாதுகாப்பு செயலாளர் கோட்ஸ் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் ஒரு வித உணர்ச்சியற்ற ஒருமைப்பாட்டை கொண்டவர்களாக இருந்தனர் என்றும், ராகுல் காந்தி ஒரு பதற்றமான அறியப்படாத குணம் கொண்டவர் மாணவர் போல் இருந்ததாகவும், அவர் பாடங்களை அறிய ஆர்வமாக இருந்தார் என்றாலும் அவர் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் காட்டவில்லை என்று ஒபாமா கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல்காந்தி ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது அவரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web