ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு! கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி!

ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை க்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதன் மத்தியில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி கூட்டணி ஆக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

income tax

இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதற்கு எதிராக திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்  கண்டனம் தெரிவித்ததாக திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தோல்வி எதிர்கொள்ளும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறைகள் இந்த ஐடி ரெய்டு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் அவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் வீட்டில் நடக்கும் வருமான வரி சோதனை க்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

From around the web