ராகுல் மேளம் கொட்ட, முதல்வர் நடனமாட, ஒரே கலகலப்பு

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் பெலகாவி என்ற இடத்தில் உள்ள எல்லம்மா கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கலந்து கொண்டார் அப்போது அங்கு மேளம் அடித்து கொண்டிருந்ததை ஆச்சரியமாக பார்த்த ராகுல்காந்தி உடனே அவரும் மேளம் அடிக்க தொடங்கினார். ராகுலை பார்த்து உடன் சென்றிருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மேளம்
 

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் பெலகாவி என்ற இடத்தில் உள்ள எல்லம்மா கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கலந்து கொண்டார்

அப்போது அங்கு மேளம் அடித்து கொண்டிருந்ததை ஆச்சரியமாக பார்த்த ராகுல்காந்தி உடனே அவரும் மேளம் அடிக்க தொடங்கினார். ராகுலை பார்த்து உடன் சென்றிருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மேளம் அடித்தார். அதுமட்டுமின்றி மேளத்தின் இசைக்கேற்க முதல்வர் நடனமும் ஆடினார். இதனால் அந்த பகுதியே ஒரு கலகலப்பாக இருந்தது

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா என்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் இப்பொழுது முதலே ஈடுபட்டு வருகிறது.

From around the web