ராகுல் காந்திக்கு ஆர்வம் இல்லை- ஆம் ஆத்மி

நாடாளுமன்ற தேர்தல் களை கட்டி வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இல்லை. 2024 மக்களவைத் தேர்தல்தான் அவரது இலக்கு. இப்போது தொகுதியை பங்கீட்டுக் கொண்டால் அந்த இலக்கு பலவீனமடையும் என ராகுல் கருதுகிறார்” என பதிவிட்டுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலை மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான
 

நாடாளுமன்ற தேர்தல் களை கட்டி வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு ஆர்வம் இல்லை- ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இல்லை. 2024 மக்களவைத் தேர்தல்தான் அவரது இலக்கு. இப்போது தொகுதியை பங்கீட்டுக் கொண்டால் அந்த இலக்கு பலவீனமடையும் என ராகுல் கருதுகிறார்” என பதிவிட்டுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலை மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான போட்டி போன்ற தோற்றத்தை பாஜக மூத்த தலைவர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் ராகுல் கனவில் மிதக்கிறார். ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வரும் தேர்தலுக்காக, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிஹார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்துகொள்ள காங்கிரஸ் கட்சி அதிக ஆர்வம் காட்டவில்லை. இது பாஜகவை தோற்கடிப்பதற்காக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் திட்டத்துக்கு எதிரானது ஆகும்” என்றும் பரத்வாஜ் பதிவிட்டுள்ளார்.

From around the web