பரபரப்பில் தேனி தொகுதி- அடுத்தடுத்து வரும் மோடி, ராகுல்

தேனி தொகுதி பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி சார்பாக அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டி இடுகிறார். அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டி இடுகிறார் இவர் அந்த தொகுதியில் நன்கு அறிமுகமானவர் மக்களிடம் பெயர் பெற்றவர் மேலும் அனைவரிடமும் இயல்பாக பேசக்கூடியவர் இவருக்கு இது மிகப்பெரிய ப்ளஸ். திமுக கூட்டணி சார்பில் போட்டி இடும் காங்கிரஸில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி இடுகிறார்.
 

தேனி தொகுதி பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி சார்பாக அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டி இடுகிறார்.

பரபரப்பில் தேனி தொகுதி- அடுத்தடுத்து வரும் மோடி, ராகுல்

அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டி இடுகிறார் இவர் அந்த தொகுதியில் நன்கு அறிமுகமானவர் மக்களிடம் பெயர் பெற்றவர் மேலும் அனைவரிடமும் இயல்பாக பேசக்கூடியவர் இவருக்கு இது மிகப்பெரிய ப்ளஸ்.

திமுக கூட்டணி சார்பில் போட்டி இடும் காங்கிரஸில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி இடுகிறார்.

ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு சம்பந்தமில்லாத தொகுதி இது என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும் இதற்கு முன் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்காரர் ஆருணுக்கு சாதகமான தொகுதிதான் இது.

வரும் 13ம் தேதி மோடி இங்கு பிரச்சாரத்துக்கு வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டி இடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பேச அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 12லேயே ராகுலும் இங்கு வருகின்றார்.

பெரும் தலைவர்களின் வருகையால் தேனி தொகுதி களை கட்டியுள்ளது.

மேலும் பரபரப்பான தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.

From around the web