இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை 

 

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 

இந்த காலாண்டு விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளிகள் திறக்கவே இல்லை அதற்குள் காலாண்டுதேர்வு விடுமுறையா? ஒருபக்கம் நெட்டிசன்கள் கேலி செய்தாலும் ஆன்லைன் வகுப்புகளுக்காகக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது என கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web