ஒரு ரூபாய்க்கு தரமான உணவு: பிரபல கிரிக்கெட் வீரரின் முயற்சி

 

பிரபல கிரிக்கெட் வீரரும் மக்களவை எம்பியுமான கௌதம் காம்பீர் தனது தொகுதியில் ஒரு ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் கௌதம் காம்பீர். இவர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை எம்பி ஆனார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தனது கிழக்கு டெல்லி தொகுதி மக்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் ஒன்றை இன்று தொடங்கி வைத்தார். கிழக்கு டெல்லியில் உள்ள காந்திநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை சமையல் கூடம் ஆக மாற்றிய கவுதம் காம்பீர் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்

gautham

இந்த உணவுக் கூடத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை உணவு அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது அரிசி பருப்பு காய்கறிகள் ஆகியவை சேர்ந்த மதிய உணவு ஒரு ரூபாய் மட்டுமே என்றும் இந்த உணவு சுகாதாரமாகவும் சத்தானதாகவும் உள்ளது என்றும் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். தனது அறக்கட்டளை மூலம் அரசின் எந்தவித உதவியும் பெறாமல் இந்த உணவகத்தை அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உணவகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் சில கிளைகள் திறக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தெருவோரத்தில் வசிப்பவர்கள் ஒருவேளை உணவு கூட இல்லாத நிலையில் உள்ளவர்கள் இந்த உணவகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஜாதி மதம் இனம் கடந்து அனைவருக்கும் நல்ல சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web