ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி தயார்: மகளுக்கும் போட்டதாக புதின் அறிவிப்பு

கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா சமீபத்தில் அறிவித்ததுஇந்த நிலையில் தற்போது மனிதர்களுக்கான சோதனை முடிந்து விட்டதாகவும் தடுப்பூசி தயாராகி விட்டதாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறியபோது ’கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசியை உலகில் முதல் முதலாக நாங்கள் தயாரித்து சாதனை செய்து உள்ளோம். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
 

கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது
இந்த நிலையில் தற்போது மனிதர்களுக்கான சோதனை முடிந்து விட்டதாகவும் தடுப்பூசி தயாராகி விட்டதாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறியபோது ’கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசியை உலகில் முதல் முதலாக நாங்கள் தயாரித்து சாதனை செய்து உள்ளோம். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை விற்பனை செய்வதற்காக அதிக அளவு உற்பத்தி செய்யப்படும்

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இந்த தடுப்பூசியை எனது மகளும் போட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்று விட்டது என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் எதிராக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் படிப்படியாக கொரோனா உலகத்தை விட்டு நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web