ஓலைச்சுவடியில் 1330 திருக்குறளை தமிழில் எழுதிய பஞ்சாபி: குவியும் வாழ்த்து!

 

உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழக மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்றாலும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் அவசியமானதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திருக்குறள் குறித்து பலர் பல்வேறு வகைகளில் உரைகள் எழுதிய நிலையில் தற்போது தமிழர் அல்லாத ஒருவர் திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதி சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

thiruvalluvar

பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். என்ஜினீயரான இவர் தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டதால் 1330 திருக்குறளையும் ஓலைச்சுவடியில் எழுத அவர் திட்டமிட்டார் 

இதனை கடந்த சில மாதங்களாக அவர் இந்த பணியை செய்து வந்த நிலையில் தற்போது அந்த பணியை முடித்து உள்ளார். பேப்பர்கள் தோன்றும் முன் ஓலைச்சுவடிகளில் தான் நம் முன்னோர்கள் தமிழ் நூல்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது மீண்டும் பழங்காலத்தில் சென்று 1330 திருக்குறளையும் தமிழரல்லாத பஞ்சாபி ஒருவர் பனை ஓலையை சுவடியில் எழுதி இருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பணியை முடிக்க அவருக்கு 18 மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web