பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு!அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் லை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்!
 
பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு!அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவு!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை மாறி தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் உத்தரபிரதேசம் ராஜஸ்தான் டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாக அதிகரித்துள்ளது.

lockdown

மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு  அறிவித்தார். இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தற்போது இரவு நேர ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கு அறிவித்தார் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் . மேலும் திரையரங்குகள் மதுபானக்கடைகள் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

From around the web