புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு! 30 லட்சம் சிக்கியது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 30 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தின் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளன. இதன் மத்தியில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் இன்றி கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வருகின்றனர்.

money

மேலும் பல பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனையில் 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர்  ரயில்வே கேட் அருகே பறக்கும் படையினர் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் உரிய ஆவணம் இன்றி வங்கியிலிருந்து  காரையூர் கொண்டு செல்லப்பட்ட 30 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். பின்னர் விசாரித்துக் கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்களை கைப்பற்றுகின்றனர்.

From around the web