மாணவிகள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் அதிரடி உத்தரவு புதுச்சேரி மகளிர் கல்லூரி!

புதுச்சேரியில் பேராசிரியர் இருவருக்கு கொரோனா பாதிப்பு!
 
மாணவிகள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் அதிரடி உத்தரவு புதுச்சேரி மகளிர் கல்லூரி!

சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியில் நடைபெற உள்ளது. அதற்காக புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. பல கட்சிகளுடன் கூட்டணி களம் இறங்க உள்ளன. இந்நிலையில் சில தினங்களாக  கொரோனா பாதிப்பானது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

corona

இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அம்மாநில அரசு அப்பகுதிக்கு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.மேலும் தமிழக அரசின் சார்பில் மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலும்  கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் புதுச்சேரியில் பேராசிரியர்கள் இருவருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது. அப்பேராசிரியர்கள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கல்லூரி ஆனது மாணவர்களை கல்லூரிக்கு வரவேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வாறு கொரோனா அதிகரிப்பது மக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.

From around the web