10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்கவிருக்கின்றது. இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த பின்
 

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்கவிருக்கின்றது. இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த பின் பாடங்கள் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் – அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை செய்யவிருப்பதாகவும், வரும் திங்கள் அல்லது செவ்வாய் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web