பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! கேப்டன்  விஜயகாந்த் இரண்டாவது நாளாக தேர்தல் பரப்புரை!

எழும்பூர் தொகுதி, திருவிக நகர் வேட்பாளரை ஆதரித்து கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரம்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக கட்சியானது பாஜக மற்றும் பாமக கட்சி கூட்டணி அமைத்து கொண்டுள்ளன. மேலும் அதிமுக கட்சியின் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கட்சி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கட்சியானது கூட்டணியிலிருந்து விலகியது.மேலும் கூட்டணியில் இருந்து விலகிய உடன்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியின் கூட்டணியில் இணைந்தது. அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு.

vijayakanth

அதன்படி தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் .இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று எழும்பூர் மற்றும் திருவிக நகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வாகனத்தின் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் எழும்பூர் தொகுதியில்  தேமுதிக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபுவை ஆதரித்து கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பிரச்சனை வாகனத்தில் சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவரது வருகையையொட்டி அப்பகுதி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் .மேலும் கேப்டனுக்கு மலர்தூவி பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வழிநெடுகிலும் பல ஆயிரக்கணக்கான  தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் திருவிக நகர் தொகுதி தேமுதிக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சேகரை ஆதரித்து கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

From around the web