"இன்சூரன்ஸ்" மூலம் மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும்!

இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது
 
health insurance

தற்போது நம் தமிழகத்தில் அதிக அளவுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் காணப்படுகின்றன. மேலும் பெரும்பாலான இன்சூரன்ஸ் மக்களுக்கு மிகவும் பிரயோஜனம் அளிக்கிறது. மேலும் இதுகுறித்து தமிழகத்தின் உயர் நீதிமன்ற மதுரை கிளை சில அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.hgihcourt

மேலும் சாதாரண மக்கள் இன்சூரன்ஸ் மூலமாக மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மனநல சுகாதார சட்டத்தின்படி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் சிறை கைதிகளுக்கும் இந்த மனநல சிகிச்சை செய்வதற்கு சிறையில் வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில் இத்தகைய உத்தரவினை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

மனநல சிகிச்சை பெற்றோருக்கும்.,அவ்வப்போது மருத்துவ சோதனை மேற்கொள்ள நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதை மிகவும் புரோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை ஏற்று மத்திய அரசும் உடனடியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web