மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்!

மூன்றாம் பாலினத்தவர் களுக்கும் நிவாரண நிதி வழங்க கோரிக்கை கூடிய மனு!
 
transgender

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடந்த வாரம் 12 மணி வரை அனுமதித்து இருந்த அரசு தற்போது காலை பத்து மணியோடு கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் வேலை இன்றி தவிக்கின்றனர்.ration

அவர்களுக்கு உதவ தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த மாதம் நிவாரணத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்பட்டன அவை பெற்றுக் கொண்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் புதிய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் நேற்றையதினம் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று மூன்றாம் பாலினத்தவர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தின் அரசின் சார்பில் நிவாரண நிதியை தங்களுக்கும் வழங்க உத்தரவிடக் கோரி மனுவினை மூன்றாம் பால் இனத்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தனி தடுப்பூசி முகாம்கள் நடத்த கோரியும் திருநங்கை கிரேஸ் பானு மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பரவலின் போது மூன்றாம் பாலினம் தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது எனவும் மனுவில் சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் முதன்முறையாக வெளியிட்ட அறிக்கையில் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற போது மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக செல்லலாம் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web