தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பலைகள்! மதுக்கடைகளை மூடக் கோரி முறையீடு!

தமிழகத்தில் கொரோனா  இரண்டாம் அலை வேகமாக பரவுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு!
 
தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பலைகள்! மதுக்கடைகளை மூடக் கோரி முறையீடு!

தமிழகத்தில் தற்போது கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது எனினும் தமிழக அரசு சார்பில் வழக்கு கட்டுப்பாட்டு விதிகள் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவைகளில் திருமண நிகழ்ச்சிக்கு 50 பேருக்கு மேல் அனுமதி மறுப்பு, இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி போன்றவைகளும் குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்கு  மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் அதிகம் வருமானம் வரும் தொழிலாக காணப்படுவது மதுபானம்.highcourt madurai

மேலும் இந்த மதுபானம் ஆனது பல்வேறு தரப்பு மக்களும்குடிக்கின்றனர் என்பதும் வேதனையான ஒன்றாக காணப்படுகிறது. மேலும் இந்த மதுபானம் அவர்களின் சுயநினைவை இழக்க செய்து அவர்களை ஆட்டிப் படைக்கிறது.  இத்தகைய மதுபானக்கடைகளை மூடக்கோரி தற்போது தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள் வருகின்றன. இந்நிலையில் இந்த மதுபான கடைகளை மூடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதனை திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். அதன்படி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வு அறிவித்துள்ளது. கொரோனா அதிகரித்துள்ளதால் வழிபாட்டு கூடங்கள் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கோவில்களில் வழிபட தடை விதித்த போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

\மேலும் மது கடைகளில் கூட்டம் நிரம்பி வருவதால் கொரோனா   பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும்கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் முறையீடு செய்துள்ளார். மேலும் அவசர வழக்காக விசாரிக்குமாறு ராம்குமார் முறையிட்டதை அடுத்து மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

From around the web