மீண்டும் வெள்ளை மாளிகை முன்பு நீடித்த போராட்டம்.. போலீஸ் தடியடி!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்
 
மீண்டும் வெள்ளை மாளிகை முன்பு நீடித்த போராட்டம்.. போலீஸ் தடியடி!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள சம்பவம் அங்கு மட்டுமல்லாது உலகின் பலநாடுகளிலும் உள்ள மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வெள்ளை மாளிகை முன்பு நீடித்த போராட்டம்.. போலீஸ் தடியடி!!

இந்தநிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். துவக்கத்தில் அகிம்சை வழியில் உட்கார்ந்து போராட்டம் செய்த நிலையில், போராட்டத்தை நிறுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாக, போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

ஊரடங்கு என்று கூறி போலீசார் அவர்களை வீடுகளுக்குத் திரும்பிச் செல்லக் கோர, போராட்டக்காரர்கள் மறுத்தனர். அதன்பின்னர் போலீசார் மக்கள்மீது தடியடி நடத்தினர். இறுதியில் மக்கள் பல்வேறு இடங்களில் தீ வைத்தனர்.

From around the web